Published : 22 Jan 2021 04:06 PM
Last Updated : 22 Jan 2021 04:06 PM

4 மீனவர்கள் உயிரிழப்பு: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ஆறுதல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (இடது); யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பனிர் எம்.ஏ. சுமந்திரன் (வலது)

ராமேசுவரம்

இலங்கைக் கடற்படையினர் நடத்தியத் தாக்குதலில் 4 தமழக மீனவர்கள் உயிரிந்தனர். இச்சம்பவத்தால் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆறுதல் கூறியுள்ளார்.

அதேவேளையில், இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக் கடற்படைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைg கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிந்த தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிழிந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் தங்களை சூழ்ந்திருக்கும் துன்பக் கடலில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதில் இருந்தே தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பாதிக்கப்படாத வகையில் இரண்டு தரப்பினரும் இணங்கிக் கொள்ளும் வகையிலான மீன்பிடி முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுத்தி வந்தேன்.

இது தொடர்பான முன்வரைவு ஒன்றை தயாரித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கடந்த வருடம் இந்தியா வந்தபோது இந்தியப் பிரதமரிடமும் அளித்திருந்தேன்.

இந்தியத் தரப்பினரும் இது குறித்த திட்டத்தினை வரவேற்றிருந்தனர். ஆனால் கரோனா பரவல் காரணமாக இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.

அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருந்த நிலையில், இலங்கை - தமிழக மீனவர்கள் இடையில் கடலில் மோதல் ஏற்பட்டு விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டுவிடும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, அது இப்போது நடந்திருக்கின்றது.

உயிரிழந்தவர்கள் தமிழக மீனவர்களாக இருப்பினும், அவர்களும் என்னுடைய தொப்புள் கொடி உறவுகள். கடந்த காலங்களில் நாம் துன்பத்தினை சுமந்த வேளைகளில் எல்லாம் எமக்காக உரிமையுடன் குரல் கொடுத்தவர்கள்.

இவ்வாறான சம்பவங்கள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டுமாயின் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை எல்லையில் மீன்பிடிப்பது தொடர்பான பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்:

இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியதில் தமிழக மீனவர்கள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இலங்கையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து யாழ்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டும் மீனவர்களை எல்லையிலேயே தடுக்குமாறும், எல்லை மீறும் மீனவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து கூறிவந்தாலும் அப்பாவி மீனவர்களின் உயிர்களைப் பறிக்கும் செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காணாமல்போன தமிழக மீனவர்களின் படகுடன் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவிவந்த நிலையில், மீனவர்கள் 4 பேரின் உடல்களை இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக றுதியான தகவலைக் கடற்படையினர் விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

உறவுகளை இழந்து தவிக்கும் மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x