

மதுரை அவனியாபுரத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் தென் மண்டல பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மாநாடு நடைபெற்றது. பொதுச் செயலாளர் அப்துல் சமீது, மாவட்டத் தலைவர் ஷேக் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்புச் செயலாளர் காதர் மைதீன் வரவேற்றார்.
கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்து பேசியதாவது: மதுரையில் செயலர் அலுவலர் இன்றி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணி நடக்கிறது. மாசி வீதிகளில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சசிகலா நடராஜன் உடல்நிலை குறித்த செய்தி ஐயத்தை எழுப்பு கிறது. அவருடைய அரசியல் வருகை பாஜக, முதல்வர் பழனி சாமிக்கு மட்டுமே ஆபத்தாக முடி யும். இதில் ஒரு சதி இருப்பது போன்ற சந்தேகம் எழுகிறது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.