

கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சிக் கழிவுகள், மற்றும் மருத்துவக் கழிவுகள் குமரி நீர்நிலைகளில் ஓரம் கொட்டப்படும் அவலம் தொடர்வதால் தண்ணீர் மாசடைந்து வருவதாக விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் குற்றச்சாட்டு விடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டம் கரோனா கட்டுப்பாடுகளுடவன் அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு, தக்கலை வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு பிரிவாகவும், ராஜாக்கமங்கலம், கிள்ளியூர், முஞ்சிறை, மேல்புறம், திருவட்டாறு வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மற்றொரு பிரிவாகவும் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதிர்ப்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 87 மனுக்களுக்கான பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முககவசமின்றி வந்த சில விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் முககவசம் அணிந்து வந்த பின்னரே கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கினார். மாத்தூர் தொட்டிப்பாலத்தை சீரமைக்க முறையாக நிலஅளவை செய்யப்பட்டதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்படும் கோழி, மற்றும் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவகள் குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், மற்றும் நீர்நிலைகள் ஓரமாக கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசடைவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று உருவாகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
அப்போது, இதுகுறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் வருகிற கும்பப்பூ நெல் அறுவடையின்போது நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் உடனடியாக தொடங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் தென்னையில் கேரள வாடல் நோயைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்கப்படும். உழவர் கடன் அட்டை மூலம் விவசாயிகள் முறையாகப் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, வேளாண்மை இணை இயக்குனர் சத்தியஜோஸ், பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, வேளாண் பிரதிநிதிகள் பத்மதாஸ், செல்லப்பா, தங்கப்பன், செண்பகசேகர பிள்ளை, தேவதாஸ் உட்பட பலர் கலந்து