

தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனால் விடுமுறை எடுத்து வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இவருக்கு கரோனா அறிகுறி தென்படவே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோதனை நடைபெற்றது.
இதில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்குள்ள கரோனா தனி சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுவிழாவில் இவர் பங்கேற்றுள்ளார்.
மேலும் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளதால் அதுதொடர்பான அதிகாரிகள், ஊழியர்கள் குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவக்கல்லூரி டீன் இளங்கோ கூறுகையில், ஆட்சியருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.