சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் முதல் கூட்டம்: நீதிபதி குலசேகரன் தலைமையில் நடந்தது

சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் முதல் கூட்டம்: நீதிபதி குலசேகரன் தலைமையில் நடந்தது
Updated on
1 min read

சாதிவாரியான கணக்கெடுப்புக் கான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நீதிபதி குலசேகரன் ஆணையத்தின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனர். வன்னியர்களுக்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம்சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், சாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆணையத்தின் முதல்கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஆணைய தலைவர் குலசேகரன் தலைமையில் நடந்தகூட்டத்தில், வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் பி.சந்திரமோகன், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு மின்னாளுமை முகமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் சி.காமராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சி.முனியநாதன், ஆணைய உறுப்பினர் - செயலர் மா.மதிவாணன் மற்றும் சென்னை மாநகராட்சி, பழங்குடியினர் நலன், ஊரகவளர்ச்சி, நகராட்சி நிர்வாகம்,பேரூராட்சிகள், சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்கான அடிப்படை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in