கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் மக்கள் கொண்டாட்டம்

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை முன்னிட்டு, துளசேந்திரபுரம் கிராமத்தில் நேற்று இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்.
அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதை முன்னிட்டு, துளசேந்திரபுரம் கிராமத்தில் நேற்று இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்.
Updated on
1 min read

அமெரிக்காவின் புதிய துணை அதிபராக பொறுப்பேற்று உள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாய் வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், அவர் வெற்றி பெற்றபோதும் இந்தக் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிலையில், துளசேந்திரபுரத்தில் உள்ள அவரது மூதாதையர் வழிபட்ட அவரது குலதெய்வக் கோயிலான தர்மசாஸ்தா கோயிலில் பொதுமக்கள் நேற்று வழிபாடு செய்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in