

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி அது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த அசோக், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் 14 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மத்திய அரசு 2016-ல் ரூ.977.50 கோடி நிதி ஒதுக்கியது. இதில் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளைச் சீரமைத்தல், வைகை ஆற்றின் இரு பக்கங்களிலும் சாலை அமைத்தல், பெரியார் பேருந்து நிலையத்தை மாற்றியமைத்தல், பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் நடக் கின்றன.
நான்கு மாசி வீதிகள் சீர மைப்புப் பணிக்காக இங்கிருந்த பழமையான மரங்கள் வெட்டப் பட்டன. மீனாட்சியம்மன் கோயில் திருவிழாவுக்கு வருவோருக்காக ஆங்கிலேயர் காலத்தில் ஏற்ப டுத்தப்பட்ட குடிநீர் வசதி அகற் றப்பட்டுள்ளது.
மாசி வீதிகளில் தரமற்ற கட்டுமானப் பொருட்களைப் பயன் படுத்தி சிமென்ட் தளம் அமைத்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர், பாதாள சாக்கடை இணைப் புக்காக சட்டவிரோதமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
எனவே, மாசி வீதிகளில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளைத் தர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மாசி வீதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் வசதி, மரம் நடுவதற்கு வசதி செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்து வரும் முறைகேடுகளை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர் வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 17-க்கு ஒத்தி வைத்தனர்.