Published : 21 Jan 2021 07:03 AM
Last Updated : 21 Jan 2021 07:03 AM

வரிஏய்ப்பு, வெளிநாட்டு பண முதலீடு புகார்: பால் தினகரனின் வீட்டில் வருமானவரி சோதனை; சென்னை, கோவை உட்பட 28 இடங்களில் நடந்தன

வரிஏய்ப்பு புகார் மற்றும் வெளிநாட்டு பணமுதலீடு தொடர்பாக கோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் பால் தினகரன். ‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் பால் தினகரன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் இரவு வரை வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைமை அலுவலகம், பாரிமுனை கடற் கரை ரயில் நிலையம் எதிரே உள்ள இயேசு அழைக்கிறார் கட்டிடம், கோவை காருண்யா பல்கலைக்கழகம், சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் வீடு, கோவையில் உள்ள காருண்யா பள்ளி அலுவலகங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் என 28 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 200-க்கும் மேற் பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடு பட்டனர்.

இயேசு அழைக்கிறார் அமைப்புக்கு வந்த வெளிநாட்டு பண உதவிகள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். சோதனையின்போதே காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந் துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகிகள், கணக்காளர்கள், ஆடிட்டர்கள் ஆகியோ ரையும் வரவழைத்து அதிகாரிகள் விசா ரணை நடத்தியுள்ளனர். சோதனையின் முடிவில் ஏராளமான ஹார்டுடிஸ்க், பென் டிரைவ், வங்கி தொடர்பான ஆவ ணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

“எங்களுக்கு கிடைத்த தகவல்களின் பேரில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்
களைக் கொண்டு வரிஏய்ப்பு நடைபெற்றுள் ளதா என்பது குறித்து ஆய்வு செய்வோம்'' என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x