Last Updated : 20 Jan, 2021 07:12 PM

 

Published : 20 Jan 2021 07:12 PM
Last Updated : 20 Jan 2021 07:12 PM

தமிழகத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்ததில் ஊழலுக்கு வாய்ப்பு: ப.சிதம்பரம் பேச்சு

சிவகங்கை

"தமிழகத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது" என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடந்த காங்கிரஸ் பூத் முகவர்கள் கூட்டத்தில் பேசியதாவது:

பாஜகவில் ஒரு வகுப்பினர் மட்டுமே உள்ளனர் அனைத்து வகுப்பினரும் இருப்பது காங்கிரஸில் தான். கரோனா தடுப்பு மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, பாஜகாவால் அல்ல.

அதிமுக விளம்பர அரசாக உள்ளது. ஒரு விளம்பரத்தில் முதல்வர் இருக்கிறார். மற்றொன்றில் துணை முதல்வர் இருக்கிறார். விளம்பரம் கொடுப்பதிலேயே குழப்பம் உள்ளது.

முதல்வர், துணை முதல்வர் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டவே புதிய திட்டங்கள் என்ற பெயரில் தற்போது அடிக்கல் நாட்டு விழா நடத்துகின்றனர்.

மகளிர் குழுகளுக்கு கடன் வழங்கியதில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கடன் வழங்கிய மகளிர் குழுக்கள் விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும்.

தேசியம், திராவிடம் வளர்த்த தமிழகத்தில் பாஜக நச்சுச் செடி வளராது. இந்திய அளவில் மத்திய அரசை எதிர்க்கும் ஒரே கட்சி காங்., மட்டுமே. அதிகாரம் மத்திய அரசு கையில் உள்ளதால் பாஜகவுக்கு மாநில கட்சிகள் பற்றிக் கவலையில்லை.

இந்துத்துவாவை தடுத்து நிறுத்துவது தென்மாநிலங்கள் தான். அதனால் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானாவில் பாஜக நுழைய முடியவில்லை. வேளாண் சட்டத்தில் வரட்டு கவுரவமாக உள்ளது பாஜக.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி என்பது தான் பாஜகவின் நோக்கம். அதனால் மற்ற மொழிகளை அழித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுகிறது. இந்தி திணிப்பால் தாய் மொழி மெல்ல, மெல்ல அழிந்துவிடும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழக எம்பிக்கள், முதல்வருக்கு மத்திய அரசு இந்தியில் கடிதம் எழுதுகிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டது திமுக, அதை கொடுத்தது காங்கிரஸ்.

தற்போது செம்மொழி தமிழுக்கு பேராபத்து வந்துள்ளது. தமிழக மக்களின் முதல் எதிரி பாஜக தான்.

பாஜக எத்தனை துறைகளை கொண்டு ஏவினாலும் காங்., தலைவர்கள் பயப்பட போவதில்லை. பாஜகவுடன் சமரசம் செய்ய போவதும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x