Last Updated : 20 Jan, 2021 06:31 PM

 

Published : 20 Jan 2021 06:31 PM
Last Updated : 20 Jan 2021 06:31 PM

குமரியில் 15,67,627 வாக்காளர்கள்: இறுதி வாக்காளர் பட்டியலில் புதிதாக 54,518 பேர் சேர்ப்பு; 7826 பேர் நீக்கம்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் 15,67,627 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். புதிதாக 54,518 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் இன்று வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; குமரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்காக 4 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 64,936 படிவம் வாங்கப்பட்டது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்ட இறந்த, இடம் பெயர்ந்த மற்றும் இரட்டை பதிவுடைய வாக்காளர்களை கண்டறிந்து நீக்கம் செய்யப்பட்டது.

அதிலிருந்து இறுதி வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதி வாரியாக புதிதாக 54,518 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 8008பேரிடம் படிவம் 7 பெறப்பட்டு அதிலிருந்து 7826 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இறுதியாக இறுதி வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளும் சேர்த்து 7,82,936 ஆண் வாக்காளர்களும், 7.84,488 பெண் வாக்காளர்களும், 203 இதரர் வாக்காளர்களும் என மொத்தம் 15,67,627 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்ட, மற்றும் வரையறுக்கப்பட்ட மையங்களில் தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று விற்றப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி. நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அடனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

வரைவு வாக்காளர் பட்டியலின்படி குமரி மாவட்டத்தில் 15,20,935 வாக்காளர்கள் இருந்தனர். இறுதி வாக்கராளர் பட்டியலில் தற்போது 15,67,627 பேர் என வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் விவரம்:

தொகுதி ஆண்வாக்காளர் பெண்வாக்காளர் இதரர் மொத்தம்

கன்னியாகுமரி 144982 147347 104 292433

நாகர்கோவில் 133014 136369 11 269394

குளச்சல் 135860 131371 14 267245

பத்மநாபபுரம் 120362 117900 28 238290

விளவங்கோடு 121339 126129 27 247495

கிள்ளியூர் 127379 125372 19 252770

மொத்தம் 782936 784488 203 1567627

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x