

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 8,33,206 ஆண் வாக்காளர்களும் 8,51,082 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதன்படி 17,876 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியலை ஆட்சியர் அண்ணாதுரை இன்று (புதன்கிழமை) அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
01.01.2021ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 16.11.2020-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இன்று (புதன்கிழமை) இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
செஞ்சி தொகுதியில் 2,60,159 வாக்காளர்களும், மயிலம் தொகுதியில் 2,19,868 வாக்காளர்களும், திண்டிவனம் தனி தொகுதியில் 2,29,912 வாக்காளர்களும், வானூர் தனி தொகுதியில் 2,25,713 வாக்காளர்களும், விழுப்புரம் தொகுதியில் 2,60,970 வாக்காளர்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்களும், திருக்கோவிலூர் தொகுதியில் 2,53,981 வாக்காளர்களும் என மொத்தம் 1,957 வாக்குச்சாவடிகளில் 8,33,206 ஆண் வாக்காளர்கள், 8,51,082 பெண் வாக்காளர்கள், 216 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16,84,504 வாக்காளர்கள் உள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் 68% பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட 17,876 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.