Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உட்பட 30 பேர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய, மாநிலஅரசு அதிகாரிகள் உட்பட 30 பேர்மீதுஅமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாபோன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்ய 2013-ம் ஆண்டுதடை விதிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், சென்னை அருகேசெங்குன்றத்தில் குட்கா குடோனில்வருமானவரித் துறை சோதனைநடத்தியபோது, சில ஆவணங்களைக் கைப்பற்றினர். அதில், தமிழகத்தில் குட்கா பொருட்களை விற்பனை செய்ய அமைச்சர், காவல் துறை அதிகாரிகள், உணவுத் துறைஅதிகாரிகளுக்கு குட்கா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்திருப்பதற்கான தகவல்கள் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சிபிஐவிசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார்,மத்திய கலால் வரித் துறை அதிகாரிநவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்குசென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ சார்பில் ஏற்கெனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடந்த புகார் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. குட்கா விற்பனை மூலம் ரூ.639கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடையாளம் தெரியாத மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக 2019, ஜுனில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

அதைத்தொடர்ந்து, குட்கா நிறுவன உரிமையாளர், பங்குதாரர்களுக்கு சொந்தமான 174 இடங்களில் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறைமுடக்கியது. மேலும், குட்கா விவகாரத்தில் முன்னாள் வணிக வரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா,தற்போது பொறுப்பில் உள்ள 12காவல் துறை அதிகாரிகளுக்குஅமலாக்கத் துறை சம்மன் அனுப்பி விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உட்பட 30 பேர்மீது அமலாக்கத் துறை நேற்றுகுற்றப்பத்திரிகை தாக்கல் செய் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x