Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

மதுரையில் முதல் முறையாக நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்: அதிகாரிகள்-எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தால் முடிவு எட்டப்படவில்லை

மதுரையில் முதல் முறையாக நடை பெற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கும், எதிர்க்கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல், குழப்பம் நிலவியது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை உட்பட 10 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட் டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளைக் கண்காணிக்கவும், ஆலோசனைகள் வழங்கவும் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், எம்.பி. இணைத் தலைவராகவும், எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களாகவும் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும், இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

இவற்றைப் பின்பற்றாமல் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் நடப்பதாக, மதுரையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு, வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம் சாட்டினார். மேலும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தை உடனடி யாகக் கூட்டாவிட்டால் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் நானே இக்கூட்டத்தை மதுரையில் கூட்டுவேன் என்று மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.

ஆனாலும், கூட்டத்தை நடத்து வதற்கான ஏற்பாடுகளைச் செய்யாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடத்த உள்ளதாக, கடந்த 18-ம் தேதி வெங்கடேசன் எம்.பி. அறிவித்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் அவசர அவசரமாக ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கான ஆலோசனைக் குழு கூடுவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் இக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் குழுத் தலைவரும் ஆட்சியருமான அன்பழகன், மாநக ராட்சி ஆணையாளர் விசாகன், இணைத் தலைவர் சு.வெங்கடேசன் எம்.பி., உறுப்பினர்கள் அதிமுக எம்எல்ஏ விவி.ராஜன் செல்லப்பா, திமுக எம்எல்ஏக்கள் பிடிஆர். பழனி வேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது எந்த அடிப்படையில் இக்கூட்டத்தை நடத்தாமல் பணிகளை செயல்படுத்துகிறீர்கள்? என்று வெங்கடேசன் எம்.பி., எம்எல்ஏக்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி வாக்குவாதம் செய்தனர். ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கூறிய விளக் கங்களை அவர்கள் ஏற்கவில்லை.

நடக்கிற திட்டங்களை எங்கள் ஆலோசனைப்படி நடத்த வேண்டும், அதற்கு 10 ஆலோசனைகளை வழங்குகிறோம், இனி மாதம்தோறும் இக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும், அவ்வாறு கூட்டாவிட்டால் நாங்களே கூட்டத்தைக் கூட்டி பணிகளை ஆய்வு செய்வோம் என்றனர். ஆனால் எந்த முடிவும் எட்டாமல் கூட்டம் முடிவடைந் தது.

இக்கூட்டத்துக்குப் பிறகு வெங்கடேசன் எம்.பி., எம்எல்ஏக்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான தலைமைச் செயல் அதிகாரிகளை நியமிக்கவில்லை. பெரியார் பஸ் நிலையத்தில் 40 முதல் 60 சதவீதம் வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல்தான் அதிகரிக் கும் எனத் தெரிவித்தனர்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் பெரும் பாலானவை முடியும் தருவாயில் உள்ளன. இதற்கான ஆலோசனை களை இதுவரை கூறாமல், தற்போது தாமதமாகக் குற்றம் சாட்டுவது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சு.வெங்கடேசன், ‘‘இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல் களைத் தெரிந்து கொள்வதற்குள் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2 மாதங்களுக்கு முன்பே மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு, வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். அதற் குள் அந்த ஆட்சியர் மாறுதலாகிச் சென்றுவிட்டார். தற்போது மீதம் உள்ள திட்டத்தையாவது சிறப்பாகச் செய்யலாம் என்றே, இந்த கூட்டத்தை கூட்டச் சொன்னோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x