Published : 04 Oct 2015 10:23 AM
Last Updated : 04 Oct 2015 10:23 AM

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நல கூட்டமைப்பு உருவாக்கம்: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா வீட்டில் வைகோ அறிவிப்பு

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சி களுக்கு மாற்றாக ‘மக்கள் நல கூட்டமைப்பு’ உருவாக்கப் பட்டுள்ளதாகவும், அதன் அதிகா ரபூர்வ அறிவிப்பு 5-ம் தேதி திருவாரூரில் வெளியிடப்படும் என மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ, காஞ்சிபுரம் அண்ணா வீட்டில் தெரிவித்தார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ, மக்களை சந்திக்கும் விதமாக வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாகன பிரச்சாரத்தை காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பெரியார் தூண் அருகே நேற்று தொடங்கினார். முன்னதாக, பேரறிஞர் அண்ணா வீட்டுக்கு நேற்று காலை சென்ற வைகோ, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.

மதிமுக, இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய நான்கு கட்சி இணைந்து, மக்கள் நல கூட்டமைப்பை உருவாக்கியுள் ளோம். இதுதொடர்பான, அதிகார பூர்வ அறிவிப்பு திருவாரூரில் நாளை மறுதினம்(5-ம் தேதி) வெளியிடப்படும். இந்த அமைப்பு, தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அமைப்பாக அமையும்.

தமிழ்நாட்டில் உள்ள 100 சதவீத வாக்காளர்களில், 35 சதவீதம் கட்சி சார்ந்த வாக்காளர்களர்களாக உள்ளனர். மீதமுள்ள 65 சதவீதம் வாக்காளர்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள். அவர்களை நம்பி, மக்கள் நல கூட்டமைப்பை அமைத் துள்ளோம். இந்த கூட்டணியின் வெற்றிக்குப் பிறகே முதல்வர் குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், காந்தி சாலையில் மாலை பொதுகூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அங்கேயே வாகன பிரசாரத்தை தொடங்கி வாலாஜா பாத், படப்பை, முடிச்சூர், மாங்காடு, அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் வழியாக வந்து தாம்பரத்தில், முதல் நாள் பய ணத்தை நிறைவு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x