Published : 08 Oct 2015 05:51 PM
Last Updated : 08 Oct 2015 05:51 PM

சவுதியில் இறந்த தொழிலாளி உடலை கொண்டுவர கோரிக்கை: 5 மாதங்களாக போராடும் குடும்பம்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (52). கடந்த 23 ஆண்டுகளாக சவுதி அரேபியா நஜாரம் மாகாணத்தில் முகமது அல் சுகூர் என்பவரது பண்ணையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 15-ல் மாரடைப்பால் பாஸ்கரன் இறந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

இதனால், அவரது மனைவி அமுதா(45), மகள் பூங்கோதை(24), மகன் கார்த்திகேயன்(26) உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் பாஸ்கரனின் முதலாளி அமுதாவைத் தொடர்பு கொண்டு, “உங்கள் கணவரை சவுதியிலேயே அடக்கம் செய்து விடுகிறோம். உங்களுக்கு ரூ.7 லட்சம் பணம் அனுப்பி வைக்கிறோம்” எனத் தெரிவித்தாராம்.

ஆனால், அவரது குடும்பத்தினர் அதற்கு ஒப்புக் கொள்ளமல், பாஸ்கரன் உடலை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். எனினும், அவரது உடலை அனுப்பததால், மயிலாடுதுறை எம்.பி. பாரதிமோகன், தஞ்சை ஆட்சியர் என்.சுப்பையன் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனர்.

எனினும், 5 மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்காததால், கடந்த வாரம் ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து அமுதா கூறும்போது, “எனது கணவருக்கு இறுதிச் சடங்கு செய்யாமல், எங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு, அவரது உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x