பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் காலமானார்

பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் காலமானார்
Updated on
1 min read

கும்பகோணத்தில் பிறந்த வெங்கட் சாமிநாதன், இலக் கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலைகள் போன்ற துறைகளில் 50 ஆண்டு களாக விமர்சனக் கட்டுரைகளை எழுதியவர்.

35 நூல்கள் எழுதியுள்ள இவர் மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த ‘அக்ர ஹாரத்தில் கழுதை’ என்ற திரைப் படத்துக்கு திரைக்கதை எழுதியுள் ளார். 2003-ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பும், டொரொண்டோ பல்கலையும் இணைந்து இவருக்கு ‘இயல் விருது’ வழங்கின.

இவரது மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்டார். கணேஷ் என்ற மகன் இருக்கிறார். வெங்கட் சாமிநாதன் உடல் பெங்களூருவில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in