

கொடைக்கானலில் மழைப் பொழிவு குறைந்ததால் உறைபனி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அதிகாலையில் புற்கள், வாகனங்கள் மீது பனி படர்ந்து காணப்படுகிறது. இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளதால் கடும் குளிர் நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை க்கானலில் வடகிழக்கு பருவமழை நீடித்துவந்த நிலையில் தொடர் மழையால் பனிப்பொழிவு குறைவாகவே காணப்பட்டது. வழக்கமாக மார்கழியில்தான் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸூக்கும் கீழ் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மார்கழியில் தொடர்மழை பெய்ததால் பனிப் பொழிவு முற்றி லுமாக இல்லை.
வழக்கமாக மார்கழி மாத முடிவில் பனி குறையத் தொடங்கி விடும். ஆனால் தை மாதம் தொடங்கிய நிலையில் தற்போதுதான் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. கடந்த இருதினங்களாக மழைப் பொழிவு முற்றிலும் இல்லாமல் பகலில் வெயில் காணப்படுவதால், இரவு தொடங்கி அதிகாலை வரை உறை பனி காணப்படுகிறது.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதி, ஏரிச் சாலை, ஜிம்கானா பகுதி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை உறைபனி காணப் பட்டது. புற்கள் மீது பனிபடர்ந்து வெண்மை நிறத்தில் காணப் பட்டது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது பனிபடர்ந்து இருந்தது.
கடந்த சில தினங்களாக கொடைக்கானலில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரியாக இருக்கும் நிலையில், குறைந்த பட்ச வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இரு தினங் களுக்கு முன்பு இரவில் 8 டிகிரி செல்சியசாக இருந்த குறைந்தபட்ச வெப்ப நிலை நேற்று இரவு 6 டிகிரி செல்சியசாக குறைந்தது.
இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உறைபனி ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏரி யின் மேல்பகுதி தண்ணீரில் படர்ந்திருந்த பனிப்படலம் வெயில் பட்டவுடன் ஆவியாக மாறி வெளியேறியது பார்ப்பதற்கு ரம் மியமாக இருந்தது. உறைபனி காலம் தாமதமாக தொடங்கிய நிலையில் எப்போதுவரை நீடிக் கும் என்பது கணிக்க இயலாத நிலையில் உள்ளது.