Published : 19 Jan 2021 06:51 am

Updated : 19 Jan 2021 14:28 pm

 

Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 02:28 PM

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 கேட்டு போராட்டம்

crops-affected-by-rain

கும்பகோணம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் நேற்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை வேளாண்மை விரிவாக்க மையம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி தலைமை யில், ஒன்றியச் செயலாளர் செந்தில் குமார் முன்னிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடர் மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்புக்கான உச்சவரம்பு 33 சதவீதம் என்பதை அரசு நீக்கி முழு பாதிப்பையும் கணக்கீடு செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் விவசாயக் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய தொழிலா ளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இரா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதேபோல, திருவையாறு, பாபநாசம், கும்ப கோணம், திருப்பனந்தாள், திருவி டைமருதூர் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்களின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டத்தில் மாவூர், ஆலத்தம்பாடி உட்பட 10 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். திருத் துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நகரச் செயலாளர் ரகுராமன், ஒன்றியச் செயலாளர் காரல்மார்க்ஸ், மாநிலக்குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜோதிபாசு உள்ளிட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டதால், வட்டாட்சியர் ஜெகதீசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஜன.30-ம் தேதிக்குள் முழுமையான நிவாரணம் வழங்கப் படும். ஜூலைக்குள் பயிர்க் காப்பீடு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில்...

காரைக்கால் மாவட்டம் திரு மலைராயன்பட்டினத்தில் மாவட்டத் தலைவர் முத்துக்குமார சுவாமி தலைமையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.தமீம் அன்சாரி உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகை மாவட்டத்தில்...

நாகை மாவட்டம் வேளாங் கண்ணி ஆர்ச் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றியச் செயலாளர் சித்தார்த்தன் தலைமை யில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல, கீழையூர் ஒன்றியம் மேலப்பிடாகையில் மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கட்ராமன் தலைமையிலும், திருக்குவளை கடைத்தெருவில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முருகையன் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. 3 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 27 பெண்கள் உட்பட 156 பேரை வேளாங்கண்ணி போலீஸார் கைது செய்தனர்.

திருமருகல் ஒன்றியம் நடுக்கடை கடைத் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் ஜெயபால் தலைமையிலும், திருமருகல் பேருந்து நிலையம் எதிரில் இந்திய தேசிய மாதர் சங்கம் சார்பில் ஒன்றியச் செயலாளர் பரிதா தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப் பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் த.செல்வராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சங்கத்தின் மாவட் டச் செயலாளர் எஸ்.சி.சோமையா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, அறந் தாங்கி, கறம்பக்குடி, அன்ன வாசல், விராலிமலை, கந்தர்வக் கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


மழைபாதிக்கப்பட்ட பயிர்கள்ஏக்கர்போராட்டம்Cropsதமிழ்நாடு விவசாயிகள்விவசாயிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x