Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுக, அமமுக உறவில் மாற்றம் நிகழலாம்: விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆரூடம்

சசிகலா விடுதலைக்கு பிறகு அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளிடையே உள்ள உறவில் அல்லது இடைவெளியில் மாற்றம் நிகழலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித் துள்ளார்.

தி.மலையில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி புதுடெல்லி யில் கடும் குளிரையும் பொருட்படுத் தாமல் விவசாய பெருங்குடி மக் கள், கடந்த 2 மாதங்களாக அறப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கருணை இல்லாத கார்ப் பரேட் மோடி அரசு, பிடிவாதமாக தன்னுடைய நிலைபாட்டில் இருந்து மாற முடியாது என உள்ளது.

போராட்டக் களத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், லட்சக்கணக்கான டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணியை டில்லியில் வரும் 26-ம் தேதி நடத்துவது என விவசாய சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அவர்கள் மீது பயங்கர ஒடுக்குமுறை ஏவப் படுமோ என்ற அச்சம் மேலோங்கி உள்ளது. எனவே, மோடி அரசு, தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டு 3 வேளாண் சட்டங் களையும் ரத்து செய்ய வேண்டும்.

வேளாண் சட்டங்களை இயற் றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை. அது, மாநில அரசு அதிகார பட்டியலில் உள்ளது. மாநில அரசுகளின் உரிமையை பறித்து, இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதித்து 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியதை கண்டித்தும், குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

அதிமுகவில் சலசலப்பு

சசிகலா விடுதலை பெற உள்ளதால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அவரது வருகையால் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதிமுக மற்றும் அமமுக ஆகிய இரண்டு கட்சிகளின் உறவில் அல்லது இடைவெளியில் மாற்றம் நிகழலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x