Published : 19 Jan 2021 07:00 AM
Last Updated : 19 Jan 2021 07:00 AM

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய வேளாண் சட்ட நகலை கிழித்தெறிந்தார் முதல்வர் நாராயணசாமி 

புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை நேற்று கூடியது. இதில், ‘மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்’ என்று வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தீர் மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அமைச்சர், ‘‘மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் கூட்டாட்சி தத்துவத் துக்கு எதிரானது. மாநில அரசின் பட்டியலில் இருந்து வேளாண் சந்தை நீக்கப்படுவதால் மானியங் கள் தர முடியாத சூழல் ஏற்படும். விவசாயம், கார்ப்பரேட் நிறுவனங் களின் ஆதிக்கத்தின்கீழ் வந்து விடும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

வேளாண் சட்டங்களுக்கு எதி ராக கடந்த 54 நாட்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடுகின்றனர். இச்சட்டத்தால் விவசாயி கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கூலி வேலை ஆட்களாகத்தான் செல்ல முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களை தந்து கொள்ளை லாபம் அடிக்கவே இச்சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் போராட்டத்தால் ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயம் சென்று விட்டால் அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் தான் உணவுப் பொருட்கள் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க கொண்டு வரப்பட்டுள்ள, விவசாயிகளுக்கு உதவாத வேளாண் சட்ட நகலை சட்டப்பேரவையில் கிழிக் கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

பின்னர் மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்த முதல்வர் நாராயணசாமி, ‘‘விரோதமான சட்டத்தை எதிர்ப்பதே முதல் கடமை. முதல்வர் என்றாலும், விவசாயத்தைக் காக்க வேண்டிய குடிமகன் என்ற அடிப்படையில் சட்ட நகலை பேரவை யில் கிழித்து எறிந்தேன்’’ என்று தெரிவித்தார்.

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவித்து, 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்படும் என்று பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து அறிவித்தார். அதன்படி முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக் கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண் டும் என அமைச்சர் கமலக்கண்ணன் கொண்டு வந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அப்போது, அமைச்சர் நமச்சிவாயம் அவையில் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

மேலும், முக்கிய கூட்டணி கட்சி யான திமுக, பிரதான எதிர்க்கட்சி யான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக நியமன உறுப்பினர் கள் தீர்மான நிகழ்வை புறக் கணித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று மத்திய வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய கூட்டணிக் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக நியமன உறுப்பினர்கள் இதை புறக்கணித்தனர். இதனால் இருக்கைகள் காலியாயின. படம்: எம்.சாம்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x