

தஞ்சை பெரிய கோயிலில் வரும் 22, 23-ம் தேதிகளில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1,030-ம் ஆண்டு சதய விழா நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின் றன.
இதுகுறித்து சதய விழா குழுத் தலைவரும், தஞ்சை எம்.எல்.ஏ- வுமான எம்.ரங்கசாமி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியது: சதய விழாவையொட்டி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், பெருவுடையாருக்கு 48 வகையான அபிஷேகம், திரு முறை வீதியுலா, கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம், நாட் டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளன.
அமைச்சர்கள், மாவட்ட ஆட்சி யர், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள், மடாதிபதிகள், பல் துறை அறிஞர்கள், கலைஞர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவை, அறிநிலையத் துறை, கலை மற்றும் பண்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை, தென்னகப் பண் பாட்டு மையம், தமிழ் பல்கலைக் கழகம், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் இணைந்து நடத் துகின்றன.
பள்ளி மாணவ, மாணவியருக்கு ராஜராஜ சோழன் குறித்த பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக, சதய விழா அழைப் பிதழை எம்.எல்.ஏ. ரங்கசாமி வெளியிட, பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர். மாவட்ட பால்வள கூட் டுறவு சங்கத் தலைவர் ஆர்.காந்தி, அரண்மனை தேவஸ் தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அற நிலையத் துறை உதவி ஆணையர் க.ரமணி,செயல் அலுவலர் அரவிந் தன், பெரிய கோயில் மேற்பார்வை யாளர் ரங்கராஜு உடனிருந்தனர்.