இன்று முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு: போக்குவரத்து விதியை மீறினால் உடனடி தண்டனை

இன்று முதல் பிப்.17 வரை சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பு: போக்குவரத்து விதியை மீறினால் உடனடி தண்டனை
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று முதல் பிப்ரவரி17-ம் தேதி வரை சாலை பாதுகாப்புமாதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தீவிரசோதனை நடத்தப்பட்டு, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர்.

பொதுமக்களிடையே சாலைவிதிகள் குறித்த விழிப்புணர்வைஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும்‘சாலை பாதுகாப்பு வாரம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு,இன்று (ஜன.18) முதல் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படும். முக்கிய சிக்னல்களில் போலீஸார்நின்று போக்குவரத்து விதிகளைகடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கு விளக்குவார்கள். சிக்னல் விதிகளைமீறி வாகனங்களை இயக்குபவர்களை நிறுத்தி அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து நிகழ்ச்சி நடத்தவும், ஹெல்மெட் அணியாமல்வருபவர்களுக்கு தண்டனை வழங்குவதுடன், புதிய ஹெல்மெட் வழங்கவும், அதற்கான பணத்தை அவர்களிடம் இருந்தே வசூல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக 7 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இந்தமுறை ஒரு மாதம் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்.17 வரை விழிப்புணர்வு, தீவிர சோதனைகள் நடத்தப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in