Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமிக்கு ரோட்டரி கிளப் விருது

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தி சிகிச்சை அளித்ததற்காக கிண்டி அரசு கரோனா மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமிக்கு, ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா’ சார்பில் ‘ஃபார் த சேக் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப்பட்டது.

சென்னை

சென்னை கிண்டி அரசு கரோனாமருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமிக்கு ரோட்டரி கிளப் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைக்கப்பட்ட தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கரோனாமருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகளுடன் யோகா மற்றும் இயற்கை மருத்துவசிகிச்சை, நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க பலூன் ஊதும்தெரப்பி, மனஅழுத்தத்தை போக்கமியூசிக்கல் தெரப்பி என பல்வேறுசிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

நோயாளிகள் தங்களுடைய நேரத்தை பயனுள்ளதாக செலவிடும் வகையில் மருத்துவமனையில் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மனநல ஆலோசனைமையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த மருத்துவமனையில் மட்டும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அர்ப்பணிப்பு உணர்வோடு பல்வேறு வசதிகளை செய்து, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமிக்கு ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ்கன்னிமாரா’ சார்பில் மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமிக்கு அயராத உழைப்புக்காக “ஃபார் த சேக் ஆஃப் ஹானர்” என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. மேலும், பெரியவர்களுக்கான 1,000 டயப்பர் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x