Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

சென்னை மாநகராட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு, தனியார் நிறுவனத்தில் பணி வழங்கநடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் மாநகராட்சி தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் 19 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிந்தனர். அதில் 6 ஆயிரம் பேர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள். மற்றவர்கள் ஒப்பந்தஅடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் தூய்மைப் பணிஏற்கெனவே தனியாரிடம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த 3 மண்டலங்கள் உட்பட மொத்தம் 11 மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த 11 மண்டலங்களில் இருந்து நிரந்தர பணியாளர்கள் தற்போது அண்ணாநகர் மண்டலத்துக்கு மாற்றப்பட்டு, அம்மண்டலத்தில் பணியில் இருந்த 500-க்கும்மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை மாநகராட்சி கடந்த 10-ம் தேதி பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சிக்காக தூய்மை பணி மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனம், தொழிலாளரின் வயது,உடல் உறுதி என அறிந்து, தகுதியானவர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. அதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பணி நீக்கம் செய்யப்பட்ட பலருக்கு, தொடர்புடைய தனியார் நிறுவனம் வேலை வழங் கியுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x