Published : 17 Jan 2021 06:01 PM
Last Updated : 17 Jan 2021 06:01 PM

வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகத் தமிழகக் காங்கிரஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாகத் தமிழகக் காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆலோசனையின்படியும் மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைப் பல மடங்கு உயர்த்தி, மக்கள் மீது சுமையை ஏற்றியதை கண்டித்தும் சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை அருகில் உள்ள ராஜீவ் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் கே.ஜெயக்குமாரின் தலைமையில் நாளை (18.01.2021) காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், தொடர்ந்து ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியும் நடைபெறும்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி. மற்றும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுர மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன்குமார், அடையார் டி. துரை, நாஞ்சில் பிரசாத், ஏ.ஜி. சிதம்பரம், டி. ரமேஷ், ஆர்.எஸ். செந்தில்குமார், ஆர். சுந்தரமூர்த்தி மற்றும் ஏ.வி. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிப்பர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகக் காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், துறை மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் செயல் வீரர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப இருக்கிறார்கள்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x