Published : 17 Jan 2021 02:04 PM
Last Updated : 17 Jan 2021 02:04 PM

சிராவயல் மஞ்சுவிரட்டு விழாத் துளிகள்

* மஞ்சுவிரட்டில் 10 மாடுகளைப் பிடித்த மதுரை வீரர் கவுதமுக்கு கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
* காளைகளை மஞ்சு விரட்டுக்கு அழைத்து வந்த 2 பெண்களுக்கு வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
* ஜல்லிக்கட்டு விதிமுறை வகுத்து, மஞ்சுவிரட்டை அழிக்காமல், மஞ்சுவிரட்டுக்கு எனத் தனியாக விதிமுறைகளை வகுக்க வேண்டுமென தமிழக மக்கள் மன்றத்தினர், மாடு வளர்ப்போர் சார்பில் பதாகை ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
* போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாததால் திருப்பத்தூர் - காரைக்குடி சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.


* மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட தொழுவில் மாடுகள் அவிழ்த்துவிடும் இடத்திலேயே பரிசுகள் வழங்கப்பட்டதால், வீரர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் காளைகளை அடக்கிய பல வீரர்களால் பரிசுகளை வாங்க முடியாமல் போனது.
* பொட்டல்களில் அவரவர் இஷ்டத்துக்கு மாடுகளை அவிழ்த்து விட்டதால் துரதிருஷ்டவசமாக 2 பார்வையாளர்கள் உயிரிழக்க நேரிட்டது. மேலும் 85 பேர் காயமடைந்தனர்.
* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை போன்று முறையாக அறிவிப்பு செய்யாததால், மாடுகளை பதிவு செய்யாமல், பெரும்பாலான மாடுகள் ஆங்காங்கே பொட்டல்களிலேயே அவிழ்த்து விடப்பட்டன.
* தகுதி இல்லாத 29 வீரர்கள் மாடுபிடிக்க அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x