Last Updated : 17 Jan, 2021 08:01 AM

 

Published : 17 Jan 2021 08:01 AM
Last Updated : 17 Jan 2021 08:01 AM

ஆன்லைனில் செடி விற்கலாம் வாங்க…

வலைத்தள வழி விற்பனைக்காக செடிகளை தன் மனைவியோடு சேர்ந்து தயார் செய்யும் சக்திவேல்.

நெய்வேலி அருகே உள்ள வேகாக் கொல்லை கிராமத்தைச் சேர்ந் தவர் சக்திவேல். 30 வயதே நிரம்பிய இவர், பொறியியலில் முதுகலை பட்டம் பெற்று, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார். வேலை கல்லூரியில் இருந்தாலும் எண்ணம், சொல், செயல் எல்லாம் தந்தையின் தொழிலான தோட்டப் பயிர் நாற்றுகளை தயார் செய்வதிலேயே இருந்தது.

நர்சரியில் புதுமையாகச் செய்ய வேண்டும் என நினைத்த சக்திவேல், சவுக்கு நாற்றுகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் உள்ள கடலோர பகுதிக்குக் கொடுத்து வந்துள்ளார். அதில் நல்ல வரவேற்பை பெற, அடுத்து ஒரு மாற்று முயற்சியாகத் தனியாக நர்சரி செடிகளை விற்க தனி இணையத்தில் தொடங்கியிருக்கிறார். அதன் மூலம் பழச் செடிகள், மலர்ச் செடிகள், மூலிகை செடிகள் என 250 வகையான செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

இது பற்றி அவரிடம் பேசினோம். “தொடக்கத்தில் சவுக்கு கன்றுகளை அதிகளவில் விற்று வந்தேன். தற்போது மக்களிடம் மாடித் தோட்டம் அமைப்பதில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு மாற்று முயற்சியாகக் குறைந்த விலையில் தரமான செடிகளை ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டேன். எனது மனைவியின் உதவியுடன் தனியாக ஒரு இணைய தளம் தொடங்கி, பாலீத்தின் பயன்படுத்தாமல் பேப்பர் கப்பில் தேங்காய் நாற்றினை பயன்படுத்தி தரமான 250 வகையான நர்சரி செடிகளை உற்பத்தி செய்து வலை தளம் வழியாக விற்று வருகிறோம்.

கன்று ஒன்றின் விலை ரூ. 20 என 10 செடிகள் கொரியர் செலவுடன் ரூ 300க்கு இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.” என்கிறார் ‘எங்கும், எதிலும் தனித்தன்மை - தரமான பொருளை நியாயமான விலையில் கொடுப்பதில் உறுதி’ இந்த உயர்ந்த வணிக நெறி இருந்தால் உச்சம் தொடலாம். உச்சம் தொட வாழ்த்துக்கள் சக்திவேல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x