Last Updated : 16 Jan, 2021 04:36 PM

 

Published : 16 Jan 2021 04:36 PM
Last Updated : 16 Jan 2021 04:36 PM

நெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்: முதற்கட்டமாக 7550 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 மற்றும் 8-ம் தேதிகளில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 8 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றிருந்தது. தற்போது தடுப்பூசி போடப்படுகிறது.

முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும், 2-ம் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கும், 3-ம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட தொற்றா நோய் உள்ளவர்களுக்கும், 4-ம் கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் படிப்படியாக தடுப்பூசி போடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தலா 100 சுகாதார பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இத்தடுப்பூசி திட்டத்துக்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் 20963 சுகாதார பணியாளர்களின் விவரங்கள் கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் இப்பணிக்காக 5 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்நிலை அ்லுவலர் பயனாளியின் அடையாள அட்டையை சரிபார்த்து, 2-ம் நிலை அலுவலர் பயனாளிகள் குறித்த விவரங்களை கோவின் செயலியில் சரிபார்த்த பிறகு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசிபோட்ட உடன் பயனாளிகள் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்பட்டு பக்கவிளைவுகள் ஏதுமில்லை என்று உறுதி செய்தபின் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு 15100 doses Covid Vaccine மற்றும் 66000 AD Syringes வரப்பெற்றுள்ளன. முதற்கட்டமாக 7550 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதை தொடர்ந்து தேவைக்கேற்ப மாநில தடுப்பு மையத்திலிருந்து தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மு. வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x