

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த வீரர்களுக்கும் சிறந்த காளைகளுக்குமான பரிசுகளை முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்.
தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், சிறந்த காளைகளுக்கு துணை முதல்வர் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா அறிவித்தார்
ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்களாக முத்துப்பட்டி திருநாவுக்கரசு, அவனியாபுரம் விஜயனும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த காளையாக வில்லாபுரம் கார்த்திக்கின் காளை தேர்வு செய்யப்பட்டது
இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் வி.வி ராஜன் செல்லப்பா ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறந்த மாடுபிடி வீரர்கள் திருநாவுக்கரசு, விஜயன் ஆகியோருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை முதல்வர் ப்ழனிசாமி வழங்கினார். சிறந்த காளைக்கான பரிசினை வில்லாபுரம் கார்த்திக்கு ஒரு லட்சம் ரூபாயை துணை முதல்வர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பல்வேறு உதவிகளைச் செய்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றியைத் தெரிவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வக்கீல் ரமேஷ்,
திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலர் இருந்தனர்
தங்களுக்குப் பரிசுத் தொகையை வழங்கி இதன் மூலம் ஜல்லிக்கட்டு வீரர்களை கவுரப்வபடுத்திய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளார்.