பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு இழப்பீடு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு இழப்பீடு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந் தோருக்கு இழப்பீடு கோரிய மனு வுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒழுகசேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

எனது மகன் ரஞ்சித்குமாரை யும், அவருடன் பயிலும் அரவிந்த், ஆனந்த், வெங்கடேசன் ஆகி யோரை பட்டாசு ஆலை நடத்தும் தனலெட்சுமி வேலைக்கு வந்தால் சம்பளம் தருவதாகக் கூறி பட்டாசு ஆலைக்கு அழைத்துச் சென்றார்.

அவர்கள் பட்டாசு ஆலையில் இருந்தபோது வெடி விபத்து ஏற் பட்டதில் ரஞ்சித்குமார் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பந்தநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்தனர். அதிகாரிகளின் கவனக்குறைவால் பட்டாசு ஆலை உரிமம் காலாவதியான பிறகும் அந்த ஆலை செயல்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 10 பேரின் குடும்பத்தின ருக்கு தலா ரூ.30 லட்சம், உடல் உறுப்புகளை நிரந்தரமாக இழந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வும், காயமடைந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in