

காவலர்களையும், பொது மக்களையும் ஊக்கப்படுத்தும் வகையில்சென்னையில் நடந்த பொங்கல்விழாக்களில் மாநகர காவல்ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்து கொண்டார். கண்ணகிநகர் குடியிருப்பு பகுதிக்கு நேற்றுமுன்தினம் சென்ற அவர், பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடினார்.
பானைகளில் அரிசி, வெல்லம்உள்ளிட்ட பொருட்களை போட்டுபொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இளைஞர்களுக்கு கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட விளையாட்டுபோட்டிகள் நடந்தன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை ஆணையர் வழங்கினார்.
பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்காக புதிய அஞ்சல் பெட்டிகளின் சேவைகளை தொடங்கி வைத்து சிறுவர், சிறுமிகளுக்கு சுயமுகவரியிட்ட அஞ்சல் அட்டைகளை வழங்கினார்.
மேலும், கண்ணகிநகர் காவல்நிலைய வளாகத்தில் புதிதாகநிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.