

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களை கவரும் வகையில் அந்தந்த பகுதிகளில் அரசியல்வாதிகள் பொங்கல் பரிசுகள் வழங்கியுள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களை கவர இந்தப் பொங்கலை பயன்படுத்தியிருக்கின்றனர் புதுச்சேரி அரசியல்வாதிகள்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பொங்கல் பரிசுகளை தாராளமாக விநியோ கித்துள்ளனர்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளன.
மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அண்டை மாநிலமான தமிழகத்தில் அரசு ரூ. 2,500 பரிசு தர புதுச்சேரியிலோ அரசு தரப்பில் ஏதும் தரவில்லை. சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர் களுக்கு மட்டும் ரூ. 200 பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்த அதிப்தியில் இருக்கும் வாக்காளர்களை கவர, அரசியல் வாதிகள் களம் இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் பொங்கல் பரிசு பொருட்கள், கரும்பு, மஞ்சள்கொத்து, பொங்கல் பானை என பரிசு பொருட்களை தந்துள்ளனர்.
ரேஷன் கார்டு, வாக்காளர் பட்டியல் விவரங் களை குறித்துக் கொண்டு தனி புத்தகம் தயாரித்து வைத்தும் சில தொகுதிகளில் பரிசுகளை வழங்குகின்றனர்.
பெரும்பாலானவர்களின் பொங்கல் பரிசு பொருட்களில் பச்சரி, வெல்லம், பச்சைபயிறு, முந்திரி, உலர் திராட்சை என பொங்கலுக்கு தேவையான பொருட்கள் இருந்தன.
இப்படி தரும் பரிசுப் பொருட்களின் பையில் தங்கள் பெயரையும், தங்கள் சின்னத்தின் பெயரையும் பொறித்து விளம் பரப்படுத்தி வருகின்றனர்.
பரிசு தர தடையில்லை
ஒரு சிலர் பொங்கல் பரிசுடன் காய்கறியும் வழங்குகின்றனர். ஏழ்மையான மக்கள் உள்ள பகுதிகளில் பொங்கல் பரிசுடன் இலவசமாக வேட்டி, சேலையும் தருகின்றனர்.
“பொங்கல் பரிசை புதுச்சேரியில் அரசு தராத சூழலில் நாங்கள் தருகிறோம். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலான பிறகுதான் பரிசு, பணம் தருவதற்கு தடை உள்ளது.
தற்போது பரிசு தர தடை யில்லை" என்கின்றனர் புதுவை அரசியல்வாதிகள்.