Published : 26 Oct 2015 08:33 am

Updated : 26 Oct 2015 08:33 am

 

Published : 26 Oct 2015 08:33 AM
Last Updated : 26 Oct 2015 08:33 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராஜகோபுரம், முக்கிய சன்னதிகளுக்கு நவம்பர் 23-ம் தேதி கும்பாபிஷேகம்

23

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ராஜகோபுரம் மற்றும் முக்கிய சன்னதிகளுக்கு வரும் நவம்பர் 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

108 திவ்ய தேச தலங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயில் ‘பூலோக வைகுண்டம்’ என்று போற்றப்படுகிறது. இங்கு 2001-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நடப் பாண்டில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, ரூ.18 கோடி மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. முதல்கட்டமாக 43 உப சன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுப்பிப்பு நிறைவு

தொடர்ந்து, பிரதான சன்னதிகள் மற்றும் கோபுரங்களைப் புதுப்பிக்கும் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், வரும் நவம்பர் 23-ம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் இரண்டாம் கட்ட கும்பாபிஷகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, “ரங்கநாதர், தாயார், ராமானுஜர், கருடர், சக்கரத்தாழ்வார் ஆகிய முக்கிய சன்னதிகளுக்கும், ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் மற்றும் விடுபட்ட சன்னதிகளுக்கும் நவம்பர் 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு அரசால் வெளியிடப்படும்” என்றனர்.

திருப்பணிக்காக ராஜகோபு ரம், வெள்ளை கோபுரம் உள்ளிட் டவற்றில் போடப்பட்டிருந்த சாரங்கள் தற்போது பிரிக்கப் பட்டுள்ளதால், அவை புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின் றன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்ராஜகோபுரம் மற்றும் முக்கிய சன்னதிகள்வரும் நவம்பர் 23-ம் தேதி கும்பாபிஷேகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author