ஸ்ரீபெரும்புதூரில் ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டஅதிமுக சார்பில், தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் குறித்து அவதூறாக பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பெண்களை இழி வாகபேசி வரும் உதயநிதியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டுதிமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோரை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:திமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி பிஞ்சிலேயே பழுத்தவர் என முதல்வர் கூறியது பொருத்தமானதுதான்.

தமிழகம் முழுவதும்திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திவரும் மக்கள் கிராம சபைகூட்டங்களில் பங்கேற்கும் தாய்மார்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள்ஸ்டாலினுக்கு தக்க பாடம்புகட்டுவார்கள் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டதில் வாலாஜாபாத் கணேசன், பெரும்புதூர்சட்டப்பேரவை உறுப்பினர் பழனி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in