

உதயநிதி மதுரை வரும்போது பெண்களை மீண்டும் இழிவுபடுத்தி பேசினால் சரியான பதிலடி தரு வோம் என்று புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எச்சரித்துள்ளார்.
பெண்களைத் தொடர்ந்து இழிவு படுத்தி பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலர் உதயநிதி, கனிமொழி ஆகியோரைக் கண்டிப்பதாகக் கூறி ஒத்தக்கடையில் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியதாவது:
பெண்களை இழிவாகப் பேசிய ஸ்டாலின், அவரது மகன் உத யநிதி இதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினாரே தவிர மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறவில்லை. உதயநிதி மதுரை வருவதாகக் கூறுகின்றனர். அப்போது பெண்களை மீண்டும் இழிவுபடுத்திப் பேசினால் சரியான பதிலடியைத் திமுகவுக்குத் தரு வோம். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒட்டு மொத்த பெண்கள் திமுகவுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மதுரை மண்டலத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செய லாளர் வி.வி.ராஜ்சத்யன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் வழக் கறிஞர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.