மக்களுக்கு அமைதி, வளர்ச்சி ஏற்பட வேண்டும்: பங்காரு அடிகளார் பொங்கல் வாழ்த்து

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்
Updated on
1 min read

மக்களுக்கு இந்த ஆண்டு அமைதியும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய பங்காரு அடிகளார் தனது பொங்கல் வாழ்த்தில் தெரிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கை:

பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா. பொங்கல் திருநாளில் பூமிக்கு பூஜை போட்டு சூரியனுக்கு படையல் வைத்து வணங்குகிறோம்.அதேபோல் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல். இயற்கையை வணங்கும் இந்த நேரத்தில் அனைத்திலும் விஞ்ஞானம் புகுந்துள்ளது. இதனால் மெய்ஞானம் போய்விட்டது.

இந்த பொங்கல் திருநாளில் இயற்கையை காக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். உண்மையை பேச வேண்டும். உழைப்பால் உயர வேண்டும். தாய், தந்தையர் சொல் கேட்க வேண்டும். உள்ளத்தில் உயிர் பற்றிய கவலை இருக்கக் கூடாது. ஆனால், அந்த உயிரை தட்டி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். உள்ளம் சுத்தமாக இருந்தால் அழிவுகள் வராது.

உள்ளத்தில் தெளிவும், பண்பும், அமைதியும், நிம்மதியும் எப்போதும் இருக்க வேண்டும். இந்த ஆண்டு அமைதி கிடைக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மன்னித்து ஏமாற்றாமல் வாழ வேண்டும். தொழில் வளர வேண்டும். அம்மையின் மறுவடிவம்தான் கரோனா. கரோனா தொற்றிலிருந்து எங்களை காப் பாற்றி அருள்புரிய வேண்டும் தாயே என்று வணங்க வேண்டும் என்று கேட்டு இந்தபொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த் துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in