

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் சன்னதிகளில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தில் 15 அடி உயரமுள்ள விஸ்வரூப பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். அவருக்கு, மகா தீபாராதனை நடைபெற்றன.
இதேபோல், திருவண்ணாமலை, ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்கள் மற்றும் பிரதான கோயில்களில் உள்ள சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.