

பொங்கல் பண்டிகை முன் னிட்டு பொய்கை சந்தையில் மாடுகள் வாங்க விவசாயிகள் அதிகளவில் திரண்டதால் விற் பனை களைகட்டியது.
வேலூர் அடுத்த பொய்கை மாட்டு சந்தை பிரசித்திப்பெற்றது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் நடைபெறும் சந்தையில் காளை, கன்று, பசுக்களை வாங்க பலரும் வந்து செல்வார்கள். பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற சந்தையில் கால்நடைகளை வாங்க ஏராள மானவர்கள் குவிந்தனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயலால் நீர் நிலைகள் அதிகம் நிரம்பியுள்ளதால் இந்தாண்டு விவசாயப் பணிகள் அதிகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பசுக்கள், கன்று குட்டிகள், ஏர்களில் பூட்டும் காளை மாடுகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பொங்கல் பண்டிகை முன்கூட்டியே உற்சாக மாக காணப்பட்டது.
அதேபோல், மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ள நிலையில், காளை மாடுகளுக்காக புத்தம் புதிய கயிறுகளையும், சலங்கைகள், காளைகளுக்கு தேவையான அலங்காரப் பொருட்களையும் ஏராளமானவர்கள் வாங்கிச் சென்றனர். காளைகள், பசுக்களின் விலையும் வழக்கத்தைவிட 10 சதவீதம் விலை அதிகமாகவே இருந்தது. நேற்று மட்டும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாடுகளை விற்பனைக்காக விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந் தனர்.