

கவுரவ கொலைகளை ஆதரிக் கும் பிற்போக்கு கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு மலைவாழ் மக்
கள் சங்கத்தின் 7-வது மாநில மாநாடு திருவண்ணாமலை யில் நேற்று தொடங்கியது. மாநிலத் தலைவர் பெ.சண்மு கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.சரவணன் வரவேற்றார். பழங் குடி மக்களின் பண்பாட்டு பேரணி நடைபெற்றது.
பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் குழு உறுப்பினரும் ஆதிவாசி உரிமைக்கான தேசிய மேடையின் அகில இந்திய துணை தலைவருமான பிருந்தா காரத் பார்வையிட்டார்.
முன்னதாக அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “வன உரிமைச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வில்லை. உள் நோக்கம் கொண் டவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றதால், அந்த சட்டத் துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக இரு கட்சிகளின் ஆட்சியில், வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சி ஏதும் செய்யவில்லை. பழங்குடி மக்களுக்கு ஒரு பட்டாகூட வழங்கவில்லை. பழங்குடியினர் சாதிச் சான்று களை பெற முடியவில்லை.
வட மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கலப்பு திருமணம் செய்பவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது. கவுரவக் கொலைகள் நடக்கின்றன. அதை சில கட்சிகள் ஊக்குவிக்கின்றன. கவுரவக் கொலை களுக்கு ஆதரவாக உள்ள பிற்போக்கு கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இட மில்லை. கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.