வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் மனு

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் மனு
Updated on
1 min read

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பதற்காக மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம், இடம் மாறிய பதிவுகள் குறித்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த சிறப்பு முகாமில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 992 விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கவும், 15 ஆயிரத்து 536 விண்ணப்பங்கள் பெயர் நீக்குவதற்காகவும், 63 ஆயிரத்து 873 திருத்தத்துக்காகவும், 30 ஆயிரத்து 4 விண்ணப்பங்கள் தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்காகவும் என மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 405 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அடுத்த சிறப்பு முகாம் அக்டோபர் 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படுகிறது. இந்த மையங்களில் உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in