வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை: ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை: ராமதாஸ் அறிவிப்பு
Updated on
1 min read

வன்னியர் இடஒதுகீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகிய இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சுமார் 2 மணி நேரம் நடந்த ஆலோசனையில் வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாகவும், கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் இன்று என்னை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள். வன்னியர்கள் இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு மீண்டும் இதுகுறித்து பேசுவதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர்.

அமைச்சர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இடப்பங்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in