அவனியாபுரம் ஐல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் பெற ஆர்வம்: 10 பெண்கள் டோக்கன் பெற்றனர்

அவனியாபுரம் ஐல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் பெற ஆர்வம்: 10 பெண்கள் டோக்கன் பெற்றனர்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கால்நடை துறை சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் டோக்கன் பெற வரிசையில் நின்றனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்குபெறும் காளை களுக்கான டோக்கன் வழங்கும் பணிகள் இன்று தொடங்கியது.

இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு ஊர்களிலிருந்து வந்த காளைகளின் உரிமையாளர்கள் அவனியாபுரம் பி.எம், எஸ் பள்ளியில் காத்திருந்தனர்.

ஏற்கெனவே கால்நடை துறை உதவி இயக்குநர் சரவணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினரால் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அதன் உயரம், கண்கள் ,திமிழ், கொம்பு ஆகியவை சரிபார்க்கப்பட்டு விண்ணப்பத்துடன் குறிப்பு எடுத்துள்ளனர். அதனடிப்படையில் இன்று ஜல்லிக்கட்டு காளை களுக்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெறுகிறது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தைப்பொங்கலன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஐல்லிக்கட்டு போட்டிக்கான டோக்கன் பெற பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் உதவியாளர்களுக்கு கரோனா தொற்று மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in