

புதுச்சேரி மாநிலம் பாகூர் அடுத்த இருளன்சந்தை மதுரா மற்றும் தமிழகப் பகுதியான திருப்பனாம்பாக்கம் கிராமத்தில் சுமார்500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமங் களில் எவரேனும் இறந்தால், சித்தேரி அணைக்கட்டு அருகேதென்பெண்ணை ஆற்றங்கரை யோரம் உள்ள இடத்தை மயா னமாக பயன்படுத்தி அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மயானத்துக்கு செல்லும் வழியின் அருகேதனியார் மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. பிறகு அதன் உரிமையாளர் மதுக்கடை மற்றும் மயா னத்துக்கு செல்லும் பாதையை சுற்றிலும் தடுப்புவேலி போட்டு கேட் அமைத்தார். இதையடுத்து அந்த கேட் வழியாக கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக மதுக்கடை உரிமையாளர் மயானத்துக்கு செல்லும் வழியில்அமைக்கப்பட்டுள்ள கேட்டை முழுவதுமாக பூட்டி, மயானத்துக்கு செல்ல அனுமதி மறுத்து வந்துள் ளார். இதனால் மதுக்கடை உரிமை யாளர் மற்றும் கிராம மக்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் இருளன்சந்தை மதுரா கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது சடலத்தை நேற்று உறவினர்கள் மயானத்திற்குக் கொண்டு சென்றபோது, மயானம் செல்லும் வழியில் இருந்த கேட் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து ஜேசிபி இயந்தி ரத்தை வரவழைத்த கிராம மக்கள், அங்கிருந்த தடுப்பு வேலியை அகற்றிவிட்டு சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதனால் மதுக்கடை உரிமையாளர் மற்றும் கிராம மக்கள் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தவகலறிந்த பாகூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் சம்பவஇடத்துக்கு சென்று இருதரப்பினரி டமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ‘‘மயானத்துக்கு செல்லபாதை அமைத்துத்தர வேண்டும் என ஆளுநர், ஆட்சியர், வட்டாட் சியர், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பலரிடமும் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என கிராம மக்கள் தரப்பில் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து போலீஸார் நாளை (இன்று) சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் பேசி மயானத்துக்கு செல்ல வழி ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்பு வேலியை அகற்றிவிட்டு சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.