Published : 08 Oct 2015 20:20 pm

Updated : 08 Oct 2015 20:20 pm

 

Published : 08 Oct 2015 08:20 PM
Last Updated : 08 Oct 2015 08:20 PM

விளைபொருட்கள் சேமிப்பு மூலம் விவசாயிகளுக்கு ரூ.573 கோடி கடனுதவி: அமைச்சர் காமராஜ் தகவல்

573

விவசாயிகள் விளைபொருட்கள் சேமிப்பு மூலம் ரூ.573 கோடி கடன் பெற்றுள்ளதாக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் இன்று நடந்தது. அப்போது அமைச்சர் காமராஜ் கூறியதாவது:

கடந்த 2011 முதல் ரூ.30 கோடி மதிப்பில் 68 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 16 சேமிப்புக் கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

நாகை, திருச்செங்கோடு, ராமநாதபுரம், காரைக்குடி, தேனி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டையில் ரூ.69 கோடியில் 72 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட 15 கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

தர்மபுரி, தஞ்சை, அருப்புக்கோட்டை,சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களி்ல் ரூ.44 கோடியில் 10 கிடங்குகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சேமிப்பு கிடங்கு நிறுவன கொள்ளளவு 8 லட்சத்து 15 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயரும்.

சேமிப்பு கிடங்குகளில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை சேமித்து, அதற்கான ரசீது மூலம் வங்கியில் கடன் பெறும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 9 ஆயிரத்து 834 பயனாளிகள் ரூ.573 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.







அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விளைபொருட்கள் சேமிப்புவிவசாயிகளுக்கு கடனுதவிஅமைச்சர் காமராஜ்தகவல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author