Published : 10 Jan 2021 02:38 PM
Last Updated : 10 Jan 2021 02:38 PM

ராமேசுவரத்தில் திறக்கப்படாத தீர்த்தங்கள்: வேதனையுடன் திரும்பும் பக்தர்கள்

காசிக்கு நிகரான யாத்திரைத் தலமாக வடமாநில பக்தர்களிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது ராமேசுவரம். இங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் மகாலட்சுமி தீர்த்தம், கெந்தமாதன தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், பிரமஹத்தி விமோசன தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், கங்கா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், யமுனா தீர்த்தம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், சக்கரத் தீர்த்தம், சர்வ தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், சிவ தீர்த்தம், நள தீர்த்தம், சாத்யாமமிர்த தீர்த்தம், நீல தீர்த்தம், சூரிய தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம் என 22 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

இந்த தீர்த்தங்களில் நீராடுவதால் உடலும், உள்ளமும் தூய்மை அடைவது டன், பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை யில் நாள்தோறும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள் ராமேசுவரம் வருகின்றனர். கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் இக்கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராட விதித்த தடை நீடித்து வருகிறது. இதனால் ராமேசுவரம் வரும் பக்தர்களை நம்பி யுள்ள அனைத்து தொழில் முனை வோரின் வாழ்வாதாரமும் முடங்கி உள்ளது. இந்த தீர்த்தங்களை திறக் கக்கோரி பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தியும், முதல்வர் மற்றும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கவனத்துகக்கு கொண்டு சென்றும் இதுவரை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்த தீர்த்தங்களை திறக்கக்கோரி ராமேசுவரத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட், அமமுக, தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக் கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, இந்து மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் சார்பில் ஜனவரி 12-ம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரி டம் கேட்டபோது, அவர் கூறுகையில், தீர்த்தக் கிணறுகளை திறக்க வேண்டும் என்று, யாத்திரைப் பணியாளர்கள் மனு கொடுத்துள்ளனர். இதை திறப்பது குறித்து அரசின் அறிவிப்பு எந்த நேரத்தி லும் வரலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x