

வாகனங்களின் முகப்புகளில் பம்பர் பொருத்தியிருப்பதால், விபத்தின் போது ஓட்டுநரின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் ‘ஏர் பேக்’ எனும் காற்றுப் பை செயல்படுவதில்லை என்று புகார் எழுந்தது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் வாகனத்தின் முகப்பில் இருக்கும் பம்பரை அகற்ற வேண்டும் என மோட்டார் வாகனத் துறை அறிவுறுத்தி வருகிறது. வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு, அகற்றாத வாகனங்களில் இருந்து பம்பரை பறிமுதல் செய்வதோடு ரூ.7,500 தொடங்கி ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகளும் தாமாகவே முன்வந்து வாகனங்களின் முகப்பில் உள்ள பம்பரை அகற்றி வருகின்றனர்.ஆனால் பம்பர் அகற்றப்படமால் கட்சிக் கொடியின் பாதுகாப்போடும் வலம் வரும் அரசியல் பிரமுகர்களின் வாகனங்கள். இதை கண்டும் காணாமல் ஒதுங்கி கொள்கின்றனர் போக்குவரத்து போலீஸார்.