

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது 3-வது கட்ட நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை அக் டோபர் 26-ம் தேதி சேலத்தில் தொடங்கி நவம்பர் 7-ம் தேதி திருவள்ளூரில் நிறைவு செய்கிறார். நவம்பர் 17 முதல் 20 வரை சென் னையில் மக்களை சந்திக்கிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். முதல்கட்ட பயணத்தை கடந்த செப்டம்பர் 20-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, அக்டோபர் 2-ம் தேதி திருச்சியில் நிறைவு செய்தார். பின்னர், 2-வது கட்ட பயணத்தை அக்டோபர் 7-ம் தேதி நீலகிரியில் தொடங்கி, 18-ம் தேதி கடலூரில் நிறைவு செய்தார்.
இந்நிலையில், ஸ்டாலினின் நமக்கு நாமே 3-வது கட்ட பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மூன்றாவது கட்ட நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை ஸ்டாலின் வரும் 26-ம் தேதி சேலத் தில் தொடங்குகிறார். 27 - சேலம், 28, 29 - விழுப்புரம், 31 - திருவண்ணா மலை, நவம்பர் 1 - தருமபுரி, 2 - கிருஷ்ணகிரி, 3, 4 - வேலூர், 5 - காஞ்சிபுரம், 6, 7 - திருவள்ளூர் என 8 மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கிறார்.
நவம்பர் 17 முதல் 20-ம் தேதி வரை சென்னை மாநகரில் ஸ்டா லின் பயணம் செய்கிறார். நமக்கு நாமே பயணத்தின் இறுதி யில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.