Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து: விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ கம் முழுவதும் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரு கிறார். அதன்படி விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்று பிரச்சார பய ணத்தை மேற்கொண்டார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வணிகர்கள், இருளர்கள், திருநங்கைகளை சந்தித்தார்.பின்னர் பூத் கமிட்டி பொறுப்பாளர் களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:

கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அதிமுகவினர் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்துள்ளனர்.

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்ததன் மூலம் இந்த வருடம்நான்கு மாணவர்களை இழந்துள் ளோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் செய்த அமைச்சர்கள் கம்பி என்ன போவது உறுதி. தேர்தல் நாளன்று நாம் அனைவரும் மிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து முண்டியம்பாக்கத் தில் கரும்பு விவசாயிகள், விக்கிரவாண்டி, கோலியனூரில் பொதுமக்களிடையே அவர் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வையும், மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை, கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து ரூ.100கோடி பாக்கியுள்ளது. அதை தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து வளவனூர், கண்ட மங்கலம், கோட்டக்குப்பம், தைலாபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிகளில் திமுக மாநில துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்பிகவுதமசிகாமணி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன், மாநில விவசாய அணி இணை செயலாளர் செந்தமிழ் செல்வன், துணை செயலாளர் அன்னியூர் சிவா, முன்னாள் எம் எல் ஏக்கள் ஏஜி சம்பத், புஷ்பராஜ், இளைஞரணி அமைப்பாளர் தினகரன், வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x