Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

பாஜக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக அமையும்: சிவகங்கையில் எல்.முருகன் பேட்டி

பாஜக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக அமையும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சிவகங்கையில் பாஜக சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பிறகு எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:

நம்ம ஊரு பொங்கல் விழா, எங்களையும் மக்களையும் இணை க்கும் விழாவாக அமையும். திருவள்ளூரில் ஜன.14-ம் தேதி நடக்கும் நம்ம ஊரு பொங்கல் விழாவில் அகில இந்தியத் தலைவர் நட்டா பங்கேற்கிறார். அன்றைய தினம் சென்னையில் 100 நாட்களில் 10 லட்சம் பேரை பாஜகவில் சேர்க்கும் திட்டத்தையும் தொடங்க உள்ளோம்.

தேர்தல் அறிக்கை குழு, ஹெச்.ராஜா தலைமையில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. எங்களது தேர்தல் அறிக்கை மக்களின் அறிக்கையாக அமையும். விவசாயிகள் நண்பன் மோடி என்ற பெயரில் விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்த திட்டத்தை விளக்கியுள்ளோம்.

இதன் காரணமாக வேளாண் சட்டத்தை கையில் எடுத்து பிரச்சி னை ஏற்படுத்த முயற்சித்த மு.க.ஸ் டாலின் திட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. இந்த தோல் வியை சட்டப் பேரவைத் தேர்த லிலும் மக்கள் திமுகவுக்கு கொடுப்பார்கள். மத்திய அரசு திட்டத்தில் தமிழகம்தான் அதிக பயனடைந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து குடும்பத்திலும் மத்திய அரசு திட்டத்தால் பயனடைந்த ஒருவர் உள்ளார். வெற்றிவேல் யாத்திரை வெற்றியாக தைப்பூசத் திருவிழாவுக்கு விடுமுறை கிடைத்துள்ளது.

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் அர்பன் நக் சலைட், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள்தான் பங்கேற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சில் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் முத்து நாகாச்சி அம்மன் கோயில் வளாகத்திலும், சத்திரக்குடி அருகே உள்ள ஓட்டமடம் காளியம்மன் கோயில் வளாகத்திலும் பாஜக சார்பில் பொங்கல் வைக்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

விழாவில், தமிழகத்தின் பாரம் பரிய கலை நிகழ்ச்சிகள், ஆண்கள், பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த விழாக்களில் எல்.முருகன் பேசும்போது, விவசாயிகளுக்குப் பாதுகாப்பான ஒரு ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி திகழ்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சிகளில் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புராமு, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளிதரன் உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x