

செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் திடீர் ஆய்வு மேற் கொள்வதற்காக வந்த காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி, மருத்துவமனை அதி காரிகள் யாரும் இல்லாததால் அதிருப்தியுடன் வெளியேறிய தாக தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங் கல்பட்டு நகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந் துள்ளது. இங்கு, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட் டங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று நடை பெற இருந்த ஒரு ஆலோ சனை கூட்டத்தில் பங்கேற்பதற் காக வந்த மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி, திடீரென செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்குள் சென்றார். அப்போது, மருத்துவ மனை முதல்வர் மற்றும் முதன்மை மருத்துவ அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இல்லை என ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. இதனால், அவர் ஆய்வு ஏதும் மேற்கொள்ளாமல் மருத் துவமனையில் இருந்து பாதி யில் திரும்பியதாக தெரிகிறது.